
சென்னை மாநகரில் மெட்ரோ ரயிலில் விஜயின் ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்ள்ளது.
தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது மாஸாக உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் வரும் தைப்பொங்கலுக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.. வரும் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அதேநேரம் தமன் இசையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. அதனால் இந்த மாத இறுதியில் ஆடியோ மற்றும் டிரெய்லரானது வெளியீடு செய்யலாம் என கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடவுள்ளது. ஆனால் தெலுங்கில் சில சிக்கல்கள் உள்ள நிலையில் அது சரி செய்யப்பட்டு தயாரிப்பு நிறுவனமே படத்தை வெளியிட உள்ளது என தகவல் . தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் முடிவடைந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பிரபல திரையரங்கு நுழைவு வாயிலில் ‘வாரிசு’ போஸ்டர்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை வழித்தடங்களில் இயங்கக்கூடிய மெட்ரோ ரயில்களில் ‘வாரிசு’ விஜய்யின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ரசிகர்களை கவரும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.