
விடுதலை: பார்ட் 1′ விமர்சனம் – எனது பார்வையில்
எட்டு நிமிட சிங்கள் ஷாட் இரயில்
விபத்துக்காட்சியில் பரபரப்பாக
படம் ஆரம்பிக்கிறது .
(கதை சொல்ல வேண்டாமே )
சூரி நடிப்பு ( நம்ம புரோட்டா சூரி)
சூரியின் அப்பாவித்தனம் வியக்கத்தக்க
வகையில் கதையின் நாயகனாக சிறந்த நடிகனாக
முழுமையாகப் பயன்பட்டுஇருக்கிறது
சூரிக்கு சிறந்த முதல் படி இந்த படம் விடுதலை தான் .
கதையின் நாயகி பவானி ஸ்ரீ சிறந்த தேர்வு , அழகு ,
உணர்ச்சிகளை நொடிகளில் காட்டும் திறமை ஒரு வலம் வருவார் .
நக்சலைட் குழுவின் மக்கள் படையின் தலைவராக
வாத்தியாராக “விஜய் சேதுபதி”
கேரக்டரில் திரையில் மனதை உலுக்குகிறார்,
படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறார்,
சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையேயான மோதல்,
இரு கண்களும் வார்த்தைகள் இல்லாமல் உரையாடுவது
அருமை. சூரி ஸ்டண்ட் காட்சிகளில்
பட்டையை கிளப்பியுள்ளார்.
பவானி ஸ்ரீ , சூரி காதல் கவிதை ,
இந்த காதல்
கதைக்கருவுக்கு முக்கியமாக
அமைந்துள்ளது திரைக்கதையின் பலம்.
இளையராஜா சார் அவரது இசை மற்றும் பாடல்கள்
90 களில் கேட்ட இரண்டு டியூன் பாடல்
அதில் ஒன்று வழிநெடுக காட்டுமல்லி மீண்டும் கேட்கலாம்.
இது வேல்ராஜ் மற்றும் வெற்றிமாறன் காம்போவின்
சிறந்த ஷாட் படம் , க்ளைமாக்ஸ் ஆக்ஷன் சீக்வென்ஸ்
நிச்சயமாக ஆடியன்ஸ் மத்தியில் பேச்சாக இருக்கும்.
பெரிய திரையில் பார்க்க தவறவிடாதீர்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு மலை வனப்பகுதியின்
அழகை படம்பிடித்து அசத்துகிறது. அதே சமயம் கதாநாயகனின்
உள்ளக் கொந்தளிப்பை அவனது கண்களால் பதிவு செய்யும்
அளவுக்கு வேல்ராஜின் லென்ஸும் நெருங்குகிறது.
கிளைமேக்ஸ் முடிந்த பிறகு பாகம் 2 இன்
சுருக்கமான காட்சிகள் காட்டுகிறார்கள் .
படம் முடிந்தும் சூரி மனதில் நிற்கிறார் .
மீண்டும் தன்னுடைய இயக்கத்தின் மூலம் படம் பார்ப்பவர்களை
வியப்பில் ஆழ்த்துகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
விடுதலை பாகம் 2 ல் முழுக்கதை வரப்போகிறது .
அனைத்து மொழி ரசிகர்களாலும் விரும்பப்படும் .
வெற்றிமாறன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த
இயக்குநர் ஆக சிகரம் தொடவேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.