Blue Sattai Maran: “ஜெயிலர்” 12 மணிக்கு முன்னாடி எப்படி.? ப்ளூ சட்டை மாறன் கேள்வி

Blue Sattai Maran: “ஜெயிலர்” 12 மணிக்கு முன்னாடி எப்படி.? ப்ளூ சட்டை மாறன் கேள்வி

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

இந்தப் படத்தை சர்வதேச அளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

படம் கண்டிப்பாக ப்ளாக்பஸ்டர் படமாக அமையும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பப்ளிக் ரெவ்யூ எப்படி சாத்தியம் -ப்ளூ சட்டை மாறன் கேள்வி: நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் ஜெயிலர். அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கைக்போர்த்துள்ளார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ள நிலையில், திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழகத்தில் இந்தப் படத்தின் முதல் ஷோ 9 மணிக்கு துவங்கியுள்ளது. அதிகாலை ஷோக்கள் இல்லாதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தபோதிலும் ரஜினி படத்தை காத்திருந்து பார்க்கவும் அவர்கள் மிகுந்த ஆர்வம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கான பப்ளிக் ரெவ்யூவை அனைத்து யூடியூப் சேனல்களும் தங்களது சேனல்களில் வெளியிட்டு வருகின்றன. படத்திற்கான அவர்களின் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை இந்த வீடியோக்களில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இது எப்படி சாத்தியம் என்று பிரபல சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். படம் தமிழகத்தில் 9 மணிக்கு துவங்கியுள்ள நிலையில், படம் முடிந்து 12 மணிக்கு மேல்தான் ரசிகர்கள் திரையரங்குகளில் இருந்து வெளியில் வருவார்கள் என்றும் இந்நிலையில் எப்படி பப்ளிக் ரெவ்யூக்களை யூடியூப் சேனல்கள் வெளியிடுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யூடியூப் சேனல்காரர்கள், பழைய ரஜினியின் படங்களுக்கு எடுத்த பப்ளிக் ரெவ்யூக்களை எடிட் செய்து ஜெயிலர் விமர்சனம் என பச்சையாக பொய் சொல்வதாக அவர் விமர்சித்துள்ளார். இதற்கேற்ப சமூக வலைதளங்களில் அதிகமான பப்ளிக் ரெவ்யூக்கள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகியுள்ள நிலையில், மற்ற மாநில ரசிகர்களும் படத்திற்கு நல்ல ரெவ்யூ கொடுத்து வருகின்றனர்.

படத்தின் முதல் பாதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் இரண்டாவது பாதி சராசரிக்கு மேல் உள்ளதாகவும் வெளி மாநில ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். சில யூடியூபர்கள், பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்த நிகழ்வுகளையும் பகிர்ந்துள்ளனர். படத்தின் முதல் ஷோ நிறைவடைந்து, 12 மணிக்கு மேல் படத்திற்கான சிறப்பான விமர்சனங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

source: filmibeat.com

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!