மலையாள திரையுலகின் முன்னணி படைப்பாளியான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி – மோகன்லால் கூட்டணியில் உருவாகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே ரசிகர்கள் படத்தின் படம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து மலையாள புத்தாண்டு நாளான விஷுவை முன்னிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் ஃபஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டள்ளனர்.
இதில் அனல் பறக்கும் தோற்றத்தில் இருக்கும் மோகன்லால் லுக்கை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து பயர் விட்டு வருகிறார்கள். பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ மலையாள மொழியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற முக்கிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.படத்துக்கு பி. எஸ். ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.
ஜான் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜான், கொசுமோன் மற்றும் அனுப் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு மாநிலங்களிலும் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையில் படப்பிடிப்பு நடைபெற்றது. 500க்கும் மேற்பட் போர் இந்த படத்திற்கு வேலைக்கு வந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சட்டை இல்லாமல் கொளுத்தும் கோடை வெயிலில் உடம்பு முழுவதும் மஞ்சள் பொடி பூசியபடி படப்பிடிப்பு நடந்தது. இதில் பார்வையற்றவர்கள் மற்றும் முதியவர்கள் சிலர் பேக்ரவுண்ட் ஆர்ட்டிஸ்டுகளாவும் வேலை செய்தனர். இதில் அவர்களுக்கு மதிய சாப்பாடு வழங்காமல் இருந்தாதாகவும் குற்றச்சாட்டினர். நபர் ஒருவருக்க 1000 ரூபாய் தருவதாக கூறி படப்பிடிப்பிற்கு அழைத்து செல்லப்பட்டு 12 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நடிக்க வைத்து உடலுழைப்பை உறிஞ்சிய பின் 500 ரூபாய் தருவதாக படக்குழுவினர் ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
I too experienced this… No proper food… No proper water… And one more thing is .. that they forced to wear a Face Mask made-up of some hard material which is in heavy weight… It’s so painful to wear for long time… And for me they said payment 1000 but only 300 I received… It’s not a small issues.. many aged people’s were there..