BREAKING: டப்பிங் பேசிய போது நேர்ந்த சோகம் – நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து காலமானார்!

#BREAKING: திரைப்பட நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்!

தமிழ் திரையுலகில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் மாரிமுத்து. 57 வயதான இவர் இன்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது நெஞ்சை பிடித்தவாறு கீழே சரிந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதை எடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள மாரிமுத்துவின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இயக்குனர் வஸந்திடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர்.பரியேறும் பெருமாள், விக்ரம், ஜெயிலர் என பல வெற்றிப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடர் இவரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சென்று பெரும் புகழை அளித்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!