அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… பா.ஜ.க-வினர் எடுத்து வந்த புனித தீர்த்தக் கும்பம்… இஸ்லாமியர்கள் செய்த செயல்! என்ன தெரியுமா?
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்திற்காக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள புனித தீர்த்தத்தை எடுக்க பாஜகவினர் அறநிலையத்துறை மற்றும் காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.
அறநிலையத்துறை அனுமதி வழங்கிய நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
மலை மேல் உள்ள சிக்கந்தர் சமாதி வழியாக செல்வதாக கூறியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பாஜகவினர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் மாநகர காவல் ஆணையரை தொடர்பு கொண்டனர்.
இதனை அடுத்து பாஜக சார்பில் இருவர் மட்டும் மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்காக பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி மதுரை மேற்கு மாவட்ட பாஜக ஓபிசி பிரிவு தலைவர் வேல்முருகன் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவர் சிவாச்சாரியார்கள் துணையுடன் மலைக்கு சென்றனர்.
திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
இதனை தொடர்ந்து பாஜகவினர் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று புனித தீர்த்தத்தை கும்பத்தில் எடுத்து வந்தனர்.
சிக்கந்தர் பாதுஷா சமாதியில் தரிசிக்க அவ்வழியே வந்த கேரளா இஸ்லாமிய பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு கலசத்தில் சொல்லும் புனித தீர்த்த கும்பத்தை தொட்டு வணங்கி பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற பக்தர்களும் தீர்த்தத்தை தொட்டு வணங்கினர்.
இஸ்லாமிய பக்தர்கள் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை தொட்டு வணங்கியது சமுக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.