மதுரையில் தனியார் ஆலை ஒன்றில் 14 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதை கண்டறிந்த குடிமை பொருள் காவல்துறையினர் மூவரை கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணியில் உள்ள மகாலிப்பட்டி பகுதியில் பழனிமுருகன் என்பவர் சொந்தமாக அரிசி ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அறிந்த குடிமை பொருள் காவல்துறையினர் தீடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, ஆலையிலுள்ள 550 மூட்டைகளில் 14 டன் பட்டை தீட்டப்பட்ட ரேஷன் அரிசி இருப்பதை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆலையின் உரிமையாளர் பழனி முருகன், அவரது நண்பர்கள் சங்கரேஸ்வரன், ராஜவேல் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையியனர், அரிசி ஆலைக்கு சீல் வைத்தனர்.