ஆன்மீக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்துகிறார்-அமைச்சர் சேகர்பாபு

ஆன்மீக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்துகிறார்-அமைச்சர் சேகர்பாபு

திருப்பரங்குன்றம் அருள்மிகு கப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் வரும்14ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு நடைபெறுகிறது.


குடமுழுக்கு விழாவிற்கு 75 யாக குண்டங்கள் தமிழ் முறைப்படி ஒதுவார்கள் 800 பேர் 200 சிவாச்சாரியர்கள் 80 பெண் ஒதுவார்கள் மூலம் 8 கால யாக பூஜை நடைபெறுகிறது

ஆன்மீக ஆட்சியாக, பக்தி மனம் கமழ்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்கின்றோம் முதல்வர் நடத்துகிறார். -அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் வருகிற திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர் அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:

முதல்வர் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பெற்றதற்கு பிறகு குடமுழுக்கு என்பது எப்போதெல்லாம் முகூர்த்த தேதிகள் வருகிறதோ அப்போதெல்லாம் குடமுழுக்கு நடக்காத நாளே இல்லை என்கிற பெருமை இந்த ஆட்சிக்கு உள்ளது. நேற்று வரை 114 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்திருக்கிறது இது ஒரு வரலாற்றில் பொண்ணு எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ஏழு திருக்கோயில்கள் குடமுழுக்கு நடந்திருக்கிறது. அறுபடை வீடுகளில் வருகிற 14-7-25 முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த பணிகளை நியமிக்கப்பட்ட நாளிலிருந்து மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மூர்த்தி அவர்களும் மாவட்டத்தின் செயலாளர் மணிமாறன் அவர்களும் திருக்கோவில் ராஜா பட்டார்களும் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் ஆணையாளர் மாநகராட்சி ஆணையாளர் அனைவரும் ஒருங்கிணைந்து நேற்று திருச்செந்தூரில் எப்படி சின்ன அசம்பாவிதம் கூட இல்லாமல், ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யாமல் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருந்த போதும் நிர்வாக திறமையால் காவல்துறை, வருவாய்துறை, மாநகராட்சி, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை அனைத்தும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியில் மயில் கல்லாக மாற்றிக் காட்டியது போல் 14ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கிலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேவையான ஏற்பாடுகளுடன் இந்த குடமுழுக்கு நடத்தி காட்டுவோம்.

ஒட்டுமொத்தமாக இந்த குடமுழுக்கை பொறுத்த அளவில் மொத்தமாக 2 கோடி 37 லட்சத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1200 ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோவில். முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் முடித்த இந்த தளத்திற்கு பல்வேறு பணிகள் பக்தர் தாங்கும் விடுதி திருமண மண்டபம் என பல்வேறு ஏற்பாடுகள் 22 கோடியில் செய்யப்பட்டு இருந்தாலும் கும்பாபிஷேக பணிகள் 2 கோடி 37 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 1700 நபர்கள் மேலே தரிசனம் செய்ய அனுமதிப்பதாகவும், அனைவரும் இறைவனை தரிசிக்கும் வகையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு அங்கு குடமுழுக்கு நடைபெறும் காட்சிகள் ஒளிபரப்பப்படும், கழி, குடிநீர் வசதி உடனடியாக அவசர காலங்களில் பயன்படுத்த தீயணைப்புத் துறை வாகனங்கள், குப்பைகள் சேராத வண்ணம் மாநகராட்சி, 3000 காவலர்களுடன் பாதுகாப்பு பணி, அவசர உதவிக்கு உயிர்களை காப்பாற்ற தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கும் பணிகள் போன்றவற்றை மேற்கொள்வதற்காக இந்த ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பக்தர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளூர் மக்களுக்கு உள்ளூரில் விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆன்மீகத்தில் கேட்பதையெல்லாம் மறுக்காமல் தருகின்ற முதல்வர் அதையும் அளிப்பார், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அனைத்து பக்தர்களுடைய குடமுழுக்கும் திருச்செந்தூரை போல் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற குடமுலுக்காக நடைபெறும் 75 யாக குண்டங்கள் வழக்கப்படுகின்றன. அனைத்து குண்டங்களிலும் தமிழ் ஓதுவார்கள் முக்கியமாக பெண் ஓதுவார்கள் வைத்து தமிழ் இசைக்க செய்கிறோம். எட்டு காலங்கள் பூஜைகள் நடைபெறுகிறது. 200 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் பங்கேற்க உள்ளனர். முருகப்பெருமானுக்கு மகிழ்ச்சியான சூழல்களை உருவாக்கி தருவோம். இது தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி, திருச்செந்தூரிலும் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு காணப்பட்டது, பழனியிலும் இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது, ஆன்மீக உலக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு அல்ல ஆன்மீக மாநாடு இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது, சுவாமி மலையில் மின் தூக்கி இந்த ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. திருத்தணிக்கு 98 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு பணிகள் இந்த ஆட்சியில் தான் நடைபெறுகிறது. 117 முருகன் திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 872 பணிகள் 1032 கோடி செலவில் இந்த ஆட்சியில் தான் தமிழ் கடவுள் முருகனுக்கு மட்டும் திருப்பணிகளும் நிறைவேற்றுகின்ற ஆட்சியாக இந்த  ஆட்சி நடைபெறுகிறது. பெருந்துட்ட வரைவு என்கிற சொல்லை முதன்முறையாக இந்த ஆட்சியில் தான் முதல்வர் உருவாக்கினார். 19 கோவில்களில் பெருந்திட்ட வரைவு பணி நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் அரோகரா, சிவ சிவ கோஷம் ஒலிக்கின்றது. ஆராதனைகள், தேவாரம் திருவாசகம் பன்னிரு முறைகள் பாடுகின்ற அனைத்தும் சிறப்போடு நடை பெறுகின்ற ஆன்மீக ஆட்சியாக, பக்தி மனம் கமழ்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்கின்றோம் முதல்வர் நடத்துகிறார்கள்.

எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் எல்லா சூழ்நிலையிலும் சமாளிப்போம். பக்தர்களின் அனைத்து தேவையும் முதல்வர் ஆலோசனைப்படி சிறப்பான முறையில் திருக்கோவிலுக்கு அமைந்திருக்கின்ற ராஜா பட்டார், மாவட்டத்திற்கு அமைந்திருக்கின்ற அதிகாரிகள் துணையோடு பக்தர்களுக்கு எந்தத் குறையும் இல்லாமல். நிறைவோடு மகிழ்ச்சியோடு இறை தரிசனம், குடமுழுக்கும் காணச் செய்வோம்.

போக்குவரத்து மாற்றம் குறித்த கேள்விக்கு:

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை போல் மிகப்பெரிய நிகழ்வு வேற எதுவும் இல்லை அதை திறமையாக கையாண்ட அதிகாரிகள் இருக்கின்ற மாவட்டம். எனவே நிச்சயமாக கூட்டத்திற்கு ஏற்றார்பால் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.

நான்கு லட்சம் பேர் அருந்துகிற அளவிற்கு அமைச்சர் உணவு ஏற்பாடு செய்திருக்கிறார். 16 மண்டபங்களில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் குடிநீர் வசதி செய்து தரப்படும். விரும்புகிற பக்கம் எல்லாம் ஒ ஆர் எஸ் எல் வழங்கும் சூழல் ஏற்படுத்தப்படும். இருக்கின்ற இடத்திலேயே குடமுழுக்கை காணுகின்ற வகையில் 40 இடங்களில் எல்இடி துறைகள் அமைக்கப்படும்.

ரோப்கார் குறித்த கேள்விக்கு:

அரசே திருப்பரங்குன்றம் ரோப் காருக்கு நிதி வழங்கியிருக்கிறது. ஆன்மீகத்திற்கு இதுவரை சுமார் 1800 கோடி மானியமாக வழங்கிய அரசு இதுதான். சாத்தியக்கூறு உள்ளதாக அறிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. வெகு வரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!