புதுச்சேரியில் அரசு ஊழியர்கள், ஜூலை 1-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனை களிலும் உரிய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்தி வருவதால், தடுப்பூசி திருவிழா வரும் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், புதுச்சேரி அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவரும். ஜூலை 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.