சபரிமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசல்… முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு! தேவசம் போர்டு முக்கியஅறிவிப்பு!

சபரிமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசல்… முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு! தேவசம் போர்டு முக்கியஅறிவிப்பு!

கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள மூங்கில் தோப்பில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சபரிமலை வழிபாடு குறித்த ஆன்லைன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தேவஸ்தான அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், வனத்துறை அமைச்சர் சசீந்திரன், தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “குழந்தைகள் மற்றும் பெண்கள் தரிசனத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தகுதியான தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும். சபரிமலையின் உண்மை நிலவரம் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும்” என்றார்.

சபரிமலை தேவசம் போர்டு சிறப்பு செயலாளர் எம்.ஜி.ராஜமாணிக்கம் கூறும்போது, “பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 1.20 லட்சமாக அதிகரித்துள்ளது. இதை 80 ஆயிரமாக முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

18 படிகளில் ஒரு மணி நேரத்தில் 4,200 பேர் ஏறலாம்.சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.இதனால், ஒரு மணி நேரத்திற்கு 3,800 பேர் மட்டுமே 18-வது படி வழியாக செல்ல முடியும்.

வசதியான தரிசனத்திற்காக, நிலக்கல்லில் தரிசனம் செய்வதற்கான நேரடி முன்பதிவை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.

இதுகுறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறுகையில்,”மண்டல பூஜை துவங்கியதில் இருந்து சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் வந்துள்ளனர். கடந்த 6-ம் தேதிக்கு பின் இந்த எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.“

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!