BREAKING NOW: கேரளா நிலக்கல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியல்!

ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வர். கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வர். இந்த நிலையில் மண்டல மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு, கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனால், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. இதனால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பக்தர்களின் வாகனங்கள் பம்பைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பக்தர்களின் வாகனங்களை பம்பைக்குச் செல்ல அனுமதிக்க கோரி, நேற்று முன்தினம் இரவு (டிச.12) எருமேலியில் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று (டிச.13) இரவு நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் அரசுப் பேருந்துகளில் பக்தர்களை ஏற்றிவைத்து பேருந்தை இயக்காமல் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் தண்ணீர், கழிப்பறை வசதியின்றியும், உணவின்றியும் தவித்து வந்த நிலையில் தற்போது கேரள அரசு வாகனத்தை சிறைபிடித்து 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முழக்கமிட்ட படி சாலைமறியலில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

ே அனுமதிக்க உத்தரவு வந்தால் மட்டுமே வாகனங்களை விட முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர். தேவஸ்தவம அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், சபரிமலை பிரச்னைகள் நேற்று இரவுக்குள் தீர்ந்துவிட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!