இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் வாகனங்களில் ஒன்று ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta). இது ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆகும்.
குடும்பங்களுக்கான ஸ்கூட்டர் (Family Scooter) என்ற அடைமொழியுடன், கடந்த ஏப்ரல் மாதம்தான் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. ஏத்தர் நிறுவனம், இதை ஏன் குடும்பங்களுக்கான ஸ்கூட்டர் என அழைக்கிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். இதை முதலில் விளக்கி விடுகிறோம். ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 56 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் (Storage Spaces) வழங்கப்பட்டுள்ளன.
அதாவது இருக்கைக்கு அடியில் 34 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், ஃப்ரங்க் என அழைக்கப்படும் முன் பகுதியில் 22 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் என மொத்தமாக 56 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸை ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. எனவே லேப்டாப், ஹெல்மெட், காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் என நிறைய பொருட்களை வைத்து கொள்ள முடியும்.
ஏத்தர் ரிஸ்டா, குடும்பங்களுக்கான ஸ்கூட்டர் என அழைக்கப்படுவதற்கு இதுவே முதன்மையான காரணம். ஆனால் இந்த குடும்பங்களுக்கான ஸ்கூட்டரை ஒருவர் நடமாடும் டாஸ்மாக் (TASMAC) ஆக மாற்றியுள்ளார். இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில் ஒருவர் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கையை தூக்கி, ‘பூட்’ பகுதியை காட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் உள்ளே என்ன இருந்தது? என்பதுதான் ஆச்சரியம். ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ‘பூட்’ பகுதியை பார்த்தால், அத்தனையும் பீர் பாட்டில்களாக உள்ளன.
அதிலும் ஒன்றல்ல… இரண்டல்ல… மொத்தம் 12 பீர் பாட்டில்கள். இந்த வீடியோவில் நம்மால் 7 பீர் பாட்டில்களை தெளிவாக காண முடிகிறது. ஆனால் இந்த வீடியோவில் பேசுபவர், 12 பீர் பாட்டில்கள் இருப்பதாக கூறுகிறார். எனவே எஞ்சிய 5 பீர் பாட்டில்கள் அடியில் வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
https://www.instagram.com/reel/DBD9dozyFqV/?igsh=aWZ2b204Z3Z2M
இத்தனைக்கும் ஐஸ் கட்டிகளை எல்லாம் வைத்து, பீர் பாட்டில்களை குளிர்ச்சியாக வேறு வைத்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்தால் பீர் பாட்டில்கள் வேகமாக குளிர்ச்சியை இழந்து விடும்.
அப்படி இருக்கும்போது, ஸ்கூட்டர்களின் இருக்கைக்கு அடியில் உள்ள ‘பூட்’ பகுதி மிகவும் சூடாக வேறு இருக்கும். இந்த பிரச்னையை சமாளிப்பதற்காக ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ‘பூட்’ பகுதியில் ஐஸ் கட்டிகளை எல்லாம் போட்டு, 12 பீர் பாட்டில்களை அடுக்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த வைரல் வீடியோ, நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 1.10 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகி கொண்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைதான், சேட்டன்கள் நடமாடும் ‘பார்’ ஆக மாற்றியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வைக்கப்பட்டிருந்தது ‘பீர்’ என்றாலும் கூட, இந்த வைரல் வீடியோ, நடைமுறையில் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ‘பூட்’ பகுதி, எவ்வளவு அதிகமான பொருட்களை எல்லாம் வைத்து கொள்வதற்கு ஏற்றதாக இருக்கும்? என்பதை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது என நாங்கள் கருதுகிறோம்.
உண்மையில் பெரும்பாலான போட்டி மாடல்களை விட, ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ‘ஸ்டோரேஜ் ஸ்பேஸ்’அதிகம். இந்த உண்மையை அனைவருக்கும் எடுத்து சொல்லும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. ஒரு வகையில் இது ஏத்தர் நிறுவனத்திற்கு இலவச விளம்பரம் என்றும் கூட சொல்லலாம். எனவே இந்த வீடியோவை எடுத்தவருக்கு ஏத்தர் நிறுவனம் நன்றி கடன் பட்டுள்ளது என்றால் மிகையல்ல!
Arun Muthu Drivespark
source: drivespark.com
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.