ரயில்வே ஸ்டேஷனில்இரயிலை நிறுத்திவிட்டு மது குடிக்க சென்ற டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது
பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு சமஸ்திபூர் இலிருந்து சகர் செல்லும் புறநகர் ரயில் நேற்று முன்தினம் மாலையில் வழியில் உள்ள ஒரு ஸ்டேஷனில் இரு நிமிடங்கள் நிற்க வேண்டும் ஆனால் மற்றொரு ரயில் கிராசிங் இருந்ததால் கூடுதல் நேரம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரயில் இன்ஜின் உதவி டிரைவர் கர்மவீர் பிரசாத் யாதவ் சிறிது நேரத்தில் வருவதாக கூறி விட்டு கீழிறங்கி சென்று விட்டார்.ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அவர் திரும்பி வராததால் ரயில் புறப்படவில்லை இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டனர். பின் அதே ரயிலில் பயணித்த மற்றொரு இன்ஜின் டிரைவர் உதவியுடன் ரயில் புறப்பட்டுச் சென்றது இதற்கிடையே மாயமான உதவி டிரைவரை மதுபோதையில் ரயில்வே போலீசார் கண்டுபிடித்தனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் இன்ஜின் டிரைவருக்கும் அது எங்கிருந்து கிடைத்தது என போலீசார் விசாரிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.