பிரதமர் மோடி விவசாயிகளை ஏமாற்றி விட்டார்! ராஜஸ்தான் முதலமைச்சரை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் குழு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2ல் கன்னியாகுமரியில் துவங்கி மார்ச் 20ல் பாராளுமன்றம் நோக்கி செல்லும் நீதி கேட்கிற நெடும் பயணம் நடைபெற்றது. இதில் இன்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாட் அவர்களை ஜெய்ப்பூர் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்தனர். பின்னர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், உங்கள் பயணம் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகளையும் தெரிவித்தததோடு பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

விவசாயிகளின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிய பிரதமர் மோடி:

டெல்லியில் விவசாயிகள் போராடிய போது போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத பாரத பிரதமர் மோடி அவர்கள் உத்தரப்பிரதேச தேர்தல் வரும் என்கிற அரசியல் நெருக்கடியை சமாளிப்பதற்காக போராடிய விவசாயிகளிடம் செய்தியாளர்கள் மூலமாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெறுங்கள் வேளாண் விரோத சட்டத்தை திரும்ப பெறுவதோடு, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவாதம் கொடுத்தார்.

ஆனால் கொடுத்து ஓராண்டுகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுவரையிலும் வாக்குறுதி நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டார்.

கடந்த மாதம் தாக்கல் செய்த பட்ஜெட் கூட்டத்திலும் அதற்கான எந்த அறிவிப்புகள்ம் இடம் பெறவில்லை.

இதனை மீண்டும் நினைவுபடுத்தி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் பிரதமரிடம் சந்தித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே பாஜக தவிர்த்த மற்ற மாநில முதலமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். ராஜஸ்தான் அரசும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் விவசாயின் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் மாநில அரசுகள் தான் வழக்கு குறித்து பதில் அளிக்க முடியும் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தட்டிக் கழித்து உள்ளனர். எனவே இது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்ததோடு, உங்கள் பயணம் வெற்றி பெற நான் முழு ஆதரவளிப்பேன் வாழ்த்துகிறேன் என்று வழி அனுப்பினார் என பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!