BREAKING NOW: திடீர் பரபரப்பு- தேனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது – தேனியில் திடீர் பரபரப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டன. நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து மனு அளித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த, நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென திரண்டு கொடியுடன் கோஷங்களை எழுப்பி தமிழக அரசு கண்டித்து ஆவேசமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீதி கேட்டு போராடிய சீமானையும் நாம் தமிழர் கட்சியினரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த தேனி மண்டல செயலாளர் பிரேம் சந்தர், தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து பேருந்து ஏற்றிச் சென்று மண்டபத்தில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!