கண்களைக் கட்டிக் கொண்டு விஜயகாந்தின் படத்திற்கு பொட்டு வைக்கும் வித்தியாசமான போட்டி.. வைரலாகும் வீடியோ..!!
பொங்கல் பண்டிகை இந்த வாரம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உள்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் முல்லைகுளம் கிராமத்தில் வருடந்தோறும் பொங்கலுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் இக்கிராமத்தைச் சார்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த வருடம் விளையாட்டு போட்டி வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று எண்ணி கேப்டன் விஜயகாந்திற்கு நெற்றியில் திலகம் இடுவது போல் போட்டி ஏற்பாடு செய்தனர். இதற்காக விஜயகாந்த் படம் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை சுவற்றில் மாட்டப்பட்டது. போட்டியில் பங்கேற்பவரின் கண்களை துணியால் கட்டி, நடந்து சென்று விஜயகாந்தின் நெற்றியில் பொட்டு வைத்தனர். இப்போட்டியில் ஆண்கள் ஆரவாரமாக கலந்து கொண்டனர். சுற்றி இருந்த பார்வையாளர்கள் மத்தியில் வரும் வரவேற்கப்பெற்றது.மொத்தத்தில் இந்த போட்டி அனைவரையும் கவர்ந்திழுத்தது என்றே சொல்லலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.