மதுரை நகர் போக்குவரத்து காவலின் புதுத் திட்டமான ‘ ஒருநாள் – ஒரு சாலை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாநகரில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டி வலியுறுத்தியும் பல்வேறு நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ‘ஒரு நாள் – ஒரு சாலை’ என்ற தலைப்பில் தினமும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது, குறிப்பிட்ட அந்த சாலையில், நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றுதல், வாகனம் நிறுத்தங்களை ஒழுங்கு படுத்துதல், பாத சாரிகள் சுலபமாக செல்வதற்கு வழி வகை செய்தல், சீரான போக்குவரத்துக்கு வகை செய்தல், போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொள்கின்றனர்.
இதன்படி, முதலில் மதுரை சிம்மக்கல், வக்கீல் புதுத்தெருவில் ‘ஒரு நாள், ஒரு சாலை’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போலீஸார் அவ்வழியாக பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களிடம் சாலை பாதுகாப்பு உறுதி மொழி துண்டு பிரசுரங்களை வழங்கியும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா இதனை பார்வையிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.