
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான மெகா கோலபோட்டி; 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசு; 1000பேருக்கு நலத்திட உதவி

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல 40க்கு 40 எப்படி வெற்றி அளித்தீர்களோ அதே போன்று 234 தொகுதிகளின் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவும்வின் கூட்டணி தான் வெற்றி பெறும். -திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் பேச்சு
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி காண ஏற்பாட்டினை இளைஞரணி அமைப்பாளர் விமல் ஏற்பாடு செய்திருந்தார்.
கோலப்போட்டிக்கான பரிசு வழங்கும் விழா மாலை திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக அரை பவுன் தங்கத்தோடும், இரண்டாம் பரிசாக கால் பவுன் தங்கத்தோடு அதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு மிக்ஸி, கிரைண்டர், சேர் போன்ற நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மேடையில் பேசிய மணிமாறன் கூறுகையில்:
மொழிக்காக போராடிய இயக்கம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல 40க்கு 40 எப்படி வெற்றி அளித்தீர்களோ அதே போன்று 234 தொகுதிகளின் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவும்வின் கூட்டணி தான் வெற்றி பெறும் என மணிமாறன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.