கார்க்குள் இருந்த நல்ல பாம்பு… பதறிப்போன உரிமையாளர்.. பெரும் பரபரப்பு!

கார்க்குள் இருந்த நல்ல பாம்பு… பதறிப்போன உரிமையாளர்.. பெரும் பரபரப்பு!

திருப்பரங்குன்றத்தில் கார் இஞ்சின்க்குள் புகுந்த ஐந்தடி நீள நல்ல பாம்பு – ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்.

திருப்பரங்குன்றம் தாலுக்கா நிலையூரில் கார் இஞ்சின்க்குள் புகுந்த நல்ல பாம்பு ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் முன்பக்க இயந்திரத்துக்குள் இருந்த நல்ல பாம்பை லாவகமாக மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தார் பாம்பு பிடிவீரர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் திருப்பதி நகரில் வசிப்பவர் கிருஷ்ணன், நேற்று இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரில் இருந்து திடீரென பாம்பின் சத்தம் கேட்டுள்ளது. உடனே பதறிப்போன கிருஷ்ணன் அருகில் உள்ளவரிடம் தகவல் தெரிவித்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த ஸ்நேக் பாபு பார்த்தபோது காரின் முன்பக்க இயந்திரத்தில் ஐந்தடி நீள நல்ல பாம்பு ஒன்று புகுந்து இருப்பது தெரியவந்தது. பின்னர் காரில் இருந்து பாம்பை வெளியேற்ற பாம்பு பிடி வீரரும் அங்கு கூடியிருந்தவர்களும் ஒரு மணி நேரமாக போராடினார். பின்னர் ஒரு கட்டத்தில் கார் இஞ்சின்க்குள் புகுந்த நல்ல பாம்பு தாமாகவே வெளியே வந்தது. உடனே பாம்பு பிடி வீரர் பாபு காத்திருந்து வெளியே வந்த நல்ல பாம்பை லாவகமாக மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தார்.

காரின் இஞ்சின்க்குள் புகுந்து ஐந்து அடி நீளப் பாம்பால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மழைக்காலம் என்பதால் வாகனத்தை இயக்கும் முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை வாகனத்தை நன்றாக பரிசோதித்து விட்டு இயக்குங்கள் என்று பாம்பு பிடி வீரர் அறிவுறுத்துகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!