
மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக கூட்டத்தில் அடிதடி மோதல்..!

மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளு முள்ளு அடிதடி மோதல்.
திருப்பரங்குன்றம் “சன்னதி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக கலாய்வு கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. கள ஆய்விற்காக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நிறைவுபெறும் வேளையில் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் பாரபட்சமாக திருப்பரங்குன்றம் தொகுதி நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிழக்கு தொகுதி மேலூர் தொகுதி நிர்வாகிகள் அழைக்கப்பட்டனர். இந்நிலையில் மேலூர் தொகுதி நிர்வாகிகளை அழைக்க பெயர் குறிப்பிடவில்லை. மேலும் சால்வை அணிவிக்கவும், புகைப்படம் எடுக்கவும் மதுரை கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர் ரமேஷ் என்பவர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் பொன் ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டது.
மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட கள ஆய்வு கூட்டம்
அதிமுக கள ஆய்வு கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய நிலையில் மதுரையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பகுதியில் இருக்கக்கூடிய மரகதம் திருமண மண்டபத்தில் கள ஆய்வுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இந்தக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன் மற்றும் செம்மலை ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
கலாய்வு கூட்டத்தின் போது ராஜன் செல்லப்பா நத்தம் விஸ்வநாதன் செம்மலை ஆகியோர் கட்சியினருடன் மேடையில் பேசிய பிறகு
கள ஆய்விற்காக வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர்களை கட்சியினர் சந்தித்து வாழ்த்துக்களையும் தங்களது நன்றிகளையும் தெரிவிக்கும் வகையில் ஒவ்வொருவராக மேடையில் வருகை தந்தனர்.
இதில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அப்போது மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ள பொன் ராஜேந்திரன் என்பவர் இவர் முன்னாள் சேர்மன் (நகர்மன்ற) தலைவராக உள்ள நிலையில் தொடர்ந்து மேலூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளருக்கான இடம் கேட்டு முயற்சி செய்வதாக கூறப்படுகிறது….
இவருடைய ஆதரவாளர்கள் மேடை ஏறும் போது மதுரை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் அவர்களது பெயரை சொல்லவில்லை எனவும், புகைப்படம் எடுக்க, சால்வை அணிவிக்க அவர்களுக்குள்ளேயே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இறுதியாக கைகலப்பாக மாறியது.
குறிப்பாக மேலே ஏறி வந்த ஒவ்வொருவருடைய பெயரையும் வழக்கறிஞர் ரமேஷ் கூறிய நிலையில் தங்களுடைய பெயரை கூறவில்லை என்றும் …. அவர்கள் தரப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் கள ஆய்விற்கும் வருகை தந்த முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுப்பதற்கும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கும் அனுமதி வழங்கிய நிலையில் தங்களுக்கு அவ்வாறு தங்களது பெயரை கூறவில்லை என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கள ஆய்வு நிறைவு பெற்ற நிலையில் திடீரென தள்ளுமுள்ளு வாக்குவாதம் சலசலப்பு ஏற்பட்டதால்
கட்சித் நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் கள ஆய்வுக்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் ஆகியோர்களை வலைபோல சூழ்ந்து கொண்டு அழைத்துச் சென்றனர்.
நடந்து கொண்டிருந்த களோபரத்தை ஒளிப்பதிவு செய்த ஊடகவியாளர்களை, செய்தியாளர்களையும் மிரட்டும் தொனியில் செய்தி எடுக்க விடாமல் அதிமுகவினர் செய்தியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது சலசலப்பு ஏற்பட்டது.
மொத்தத்தில் அமைதியாக தொடங்கி கைகலப்பு சலசலப்போடு நிறைவு பெற்ற மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கழக ஆய்வு கூட்டம்
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.