ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிட நிலையில் அவருக்கு ஆதரவாக நேற்று சீமான் பிரச்சாரம் செய்து பேசினார்.
அப்போது மீண்டும் அவர் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஏற்கனவே பெரியார் பற்றி தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துவரும் நிலையில் நேற்று மீண்டும் பெரியாரை சீண்டியுள்ளார். இது பற்றி சீமான் பேசியதாவது, கேரளாவில் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அவரை வைக்கம் பெரியார் என்று அழைக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டதால் தான் பெரியார் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் தமிழகத்தில் குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக பெரியார் குரல் கொடுக்கவில்லை. அந்த சட்டத்துக்கு எதிராக போராடியவர் முத்துராமலிங்க தேவர். அவருக்கு ஜாதி அடையாளத்தை கொடுத்து குறியீடு செய்தது யார்.? அந்த சட்டத்தை தகர்த்து எறிந்தது அம்பேத்கர். இவர்கள் இருவரும் தான் உண்மையில் பெரியார்.
பெரியார் அனைவரையும் படிக்க வைத்தார் என்று முட்டாள்கள் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கூலி உயர்வு கேட்ட 42 பேரை கொலை செய்த கோபால்சாமி நாயுடுவுக்கு ஆதரவாக பேசியவர் தான் பெரியார். அந்த சமயத்தில் முதல்வராக இருந்த அண்ணா கூட இது பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது புகார் கொடுத்து பிரச்சினையை திசை திருப்பி விட்டு விட்டனர். அதேபோன்று இமானுவேல் சேகரனார் கொலைக்கும் முத்துராமலிங்க தேவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் முத்துராமலிங்க தேவரை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறியவர் பெரியார். மேலும் இதிலிருந்தே பெரியாரின் குணங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.