
கொரோனா வைரஸ் இருப்பதாக நிரூபித்துக் காட்டினால் 10 கோடி ரூபாய் பரிசு என்ற அறிவிப்பு தமிழகத்தை மட்டும் இல்லாமல் அண்டை மாநிலத்தினரிடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆங்கிலப புத்தாண்டை வரவேற்கும் வேளையில் அதை அவர்கள் கொண்டாட முடியாத வகையில் பல்வேறு நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
இந்த இரண்டு ஆண்டு காலத்தில் கொரோனா வைரஸ், பல நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது. சில நாடுகள் அவற்றின் எல்லைகளையே மூடியுள்ளன. பல நாடுகளில் குடும்பங்கள் வைரஸ் பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பிரிந்து இருக்கின்றன.
சில இடங்களில் முக கவசத்தை அணியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உருமாறி வரும் கொரோனா திரிபில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க சிறப்பு டோஸ் போட வேண்டும் எனவும் ஆராயப்பட்டு வருகின்றன. சில மேற்கு நாடுகள் இந்த சிறப்பு டோஸ் திட்டத்தை அமல்படுத்தியதிற்கு பல முனைளில் இருந்தும் எதிப்பலைகள் வந்து கொண்டிருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் இருப்பதாக நிரூபித்து காட்டுபவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கராத்தே கண்ணதாசன் அவர்கள் அதிரடி அறிவிப்பை தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.