நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!


நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்ததில் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவரச நாயகன் கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்.

1980களின் இறுதிகள் மற்றும் 1990களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.
நடிகர் கார்த்திக் வீடு, சென்னை போயஸ் கார்டனில் உள்ளது.தனது வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கார்த்திக் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டு இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

90’s Kids Mittaigal
+919344809853

Leave a Reply

error: Content is protected !!