சிவன் வடிவில் அற்புத காட்சி அளிக்கும் நாகலிங்கம் பூ’வில் இவ்வளவு விஷயம் இருக்கா? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!

சிவன் வடிவில் அற்புத காட்சி அளிக்கும் நாகலிங்கம் பூ’வில் இவ்வளவு விஷயம் இருக்கா? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!

முன்வினை பாவம் தீர்க்கும் நாகலிங்க பூ

தமிழகத்தில் சில கோவில்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் இந்த நாகலிங்கப்பூ சிவனுக்கு வில்வம் போன்றே மகத்துவமானது. எல்லா பூக்களும் இறைவனால் உருவாக்கப்பட்டது. இறைவனுக்கானது என்று கூறுவார்கள், ஆனால் இந்த நாகலிங்கப் பூவே இறைவனாக பாவிக்கப்படுவது தான் இதன் பெருமைகளில் ஒன்று!

நாகலிங்க பூவை வழிபடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் என்னென்ன?

நாகலிங்க பூ பார்ப்பதற்கு ரொம்பவும் வித்தியாசமான அமைப்பாக இருக்கும். உற்றுப் பார்த்தால் முழு கைலாயத்தையே நம் கண் முன்னே கொண்டு வரக் கூடிய அற்புதம் நிறைந்த பூவாகும். ஆதிசேஷன் படுக்கையில் விஷ்ணு பகவான் தான் வீற்றிருப்பார், ஆனால் அங்கு சிவபெருமான் காட்சி கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித் தான் இந்த நாகலிங்கப் பூவும் இருக்கும். பூதகணங்களோடு பாம்பு படுக்கையின் மீது சிவன், லிங்க வடிவில் அற்புதமாக காட்சி கொடுக்கும் இந்த நாகலிங்கப்பூ செல்வ செழிப்பை கொடுக்கக் கூடியது. துஷ்ட சக்திகளை வீட்டிலிருந்து விரட்டக் கூடியது ஆகும்.

இந்த பூ கிளைகளில் பூக்காமல், தனி கிளை அமைத்து ஒரே நாளில் ஆயிரம் பூக்களை கூட கொடுக்கக் கூடியது. சிவ பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லாமல் இந்த பூவை தொடக் கூடாது என்பார்கள். இந்த பூ காய்ந்த பிறகும் கூட அதனுடைய சக்தி மாறாமல் அப்படியே இருக்கும் என்னும் நம்பிக்கையும் உண்டு, எனவே காய்ந்த மலர்களை ஓடும் நீரில் கொண்டு போய் விட வேண்டும். குப்பையில் போடக் கூடாது, இது தோஷத்தை உண்டாக்கும்

நாகலிங்க பூ கிடைக்கும் என்றால், அதை வாங்கி வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு எளிய அபிஷேகம் செய்து, இறைவனின் திருவடியில் பூவை சமர்ப்பித்து, உங்கள் பிரார்த்தனைகளை முன் வையுங்கள். இப்படி செய்யும் பொழுது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களால் அவதிப்படுபவர்களும் அதிலிருந்து விமோசனம் பெறுவார்கள் என்னும் ஐதீகம் உண்டு. ஒரு மனிதன் தன் பூர்வ ஜென்ம பாவத்தை கழிக்கத் தான் இப்பிறவியில் படாதபாடு பட்டு கொண்டு இருப்பான். அதிலிருந்து விமோசனம் கிடைத்தால் துன்பமெல்லாம் நீங்கி நல்வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

21 நாகலிங்க பூவை சிவன் கோவில்களில் தானம் கொடுத்து, 21 பேருக்கு அன்னதானம் செய்து வந்தால், பல பிரதோஷ பூஜைகள் செய்த பலன் நமக்கு கிடைக்கும். இதற்கு காரணம் 21 மகரிஷிகள் இந்த பூவிற்கு தங்களுடைய தவசக்திகளை வரமாக கொடுத்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது. நாகலிங்க பூவை முகர்ந்து பார்த்தாலே நுரையீரல் பிரச்சனைகள் தீர்ந்து போகும். இதிலிருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது.

ஆண், பெண் மலடு நீங்கவும், பிசிஓடி போன்ற கருப்பை சார்ந்த பிரச்சனைகள் தீரவும் இந்த மலரை பயன்படுத்துகிறார்கள். வெள்ளைப்படுதல் நோய்க்கும் இது மருந்தாக இருக்கிறது. மேலும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள இந்த நாகலிங்கப் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். வில்வார்ச்சனை போன்று நாகலிங்க பூவை கொண்டு அர்ச்சிப்பவர்களுக்கு முன்வினை, ஊழ்வினை பாவங்கள் தீர்ந்து செல்வ செழிப்பு உயரும். நன்கு குளித்து முடித்து சுத்தபத்தமாக இந்த பூவை உங்கள் கைகளாலேயே எடுத்து, சிவனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்து, அதன் பிறகு காய்ந்ததும் ஓடும் நீரில் விட்டு விடுங்கள். இது போல ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் செய்து வாருங்கள், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!