
மாவீரன் “பிரபாகரன்” வாழ்க – மாமன்றக் கூட்டத்தில் ஓங்கி ஒலித்த குரல்… காங்கிரஸ் கட்சியினரை எச்சரித்த திமுக மேயர் பிரியா… கூட்டணிக் கட்சியினருக்கு குவியும் பராட்டுகள்!
சென்னை மாநகராட்சியின் நவம்பர் மாதத்திற்கான மாமன்ற கூட்டமானது கடந்த 29.12.2023 அன்று சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் சைதை மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உட்பட 100க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மேயரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர மாநகராட்சி மன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மாமன்ற குழு தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எம்.எஸ் திரவியம் அவர்கள் தனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாமன்றத்தில் விவாதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எங்கள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் சலசலப்பையும் ஏற்படுத்தியது இந்நிலையில் மாமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலரும் மாமன்ற குழு தலைவருமான இளஞ்சேகுவாரா என்ற கோபிநாத் என்பவர் இந்த இடம் தலைவர் பிரபாகரனை பற்றி பேசும் இடமில்லை என என கூறிக் கொண்டிருக்கும்போது ஏனைய மாமன்ற உறுப்பினர்கள் “பிரபாகரன் வாழ்க மாவீரன் பிரபாகரன் வாழ்க” என பலரும் கோசமிடத் தொடங்கினர். உடனே அருகில் இருந்த மதிமுக கட்சியின் மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் எழுத்து நின்று பிரபாகரன் வாழ்க என வீர முழக்கமிட்டார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் எம்.எஸ் திரவியம் அவர்கள் இது குறித்து தொடர்ந்து பேச முற்பட்ட பொழுது ஏனைய உறுப்பினர்கள் பிரபாகரன் வாழ்க என கோசமிட்டு காங்கிரஸ் கட்சியினரை திணறடித்தனர். அப்போது மேயர் பிரியா அவர்கள் அமைதி… அமைதி… எனக்கூறி இது மாமன்ற கூட்டம் இதில் சம்பந்தம் இல்லாத விஷயத்தை பேச வேண்டாம் வெளியே போய் பேசுங்கள் என்று காங்கிரஸ் கட்சியினரை எச்சரித்தார்.
“தலைவர் பிரபாகரனை பற்றி பேசிய பேச்சை வாபஸ் வாங்க வேண்டும்” என பலத்த குரலில் பெண் உறுப்பினர் ஒருவரின் குரல் ஓங்கி ஒலித்தது. ஒரே கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கம் வகித்து வந்தாலும் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் எம்.எஸ் திரவியம் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றி அவதூறாக பேசியதற்கு கண்டன குரலை எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் விசிக பெண் உறுப்பினர்கள் மற்றும் மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் அவர்களையும் ஏனைய மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.