திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று (செப்டம்பர் 01) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்., 25 முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தியேட்டர்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 01) முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 2 ஆயிரம் பேர் வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றும் ரூ.100 கட்டணத் தரிசனத்தில் டோக்கன் முறை காலை 5.30 முதல் இரவு 7.30 வரை அனுமதி. உண்டு. அர்ச்சனை, அபிஷேகம் செய்தல், பூஜை பொருட்கள் கொண்டுவர அனுமதி இல்லை.. கடற்கரையில், நாழிகிணறு, முடிக்காணிக்கை செலுத்துதல், காதுகுத்துதல் போன்ற வேண்டுதலுக்கு அனுமதியில்லை. தங்கும் விடுதியில் அனுமதி இல்லை.
கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் வடக்கு டோல்கேட் அருகில் உள்ள கலையரங்கம் மற்றும் முடிக்காணிக்கை செலுத்தும் இடத்தில் வைத்து இலவச தரிசனத்திற்கு டோக்கன் வழங்கப்படும், 100 ரூபாய் கடட்டண தரிசனத்திற்கு கட்டண சீட்டு வழங்கப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் 25 நபர் வீதம் அனுமதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிபெண்கள்,10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.