‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ பட நடிகர் தமயோ பெர்ரி மரணம்

ஹவாய்: ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகர் தமயோ பெர்ரி சுறா தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஆன் ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ்’, ‘ப்ளூ க்ரஷ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தமயோ பெர்ரி. இவர் நீர்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளராகவும், நீச்சல் வீரர்களை பாதுகாக்கும் உயிர்காப்பாளராகவும் (Lifeguard) இருந்து வந்தார். இந்நிலையில் அவர் ஹவாய் தீவின் ஓஹூ பகுதியின் நார்த் ஷோர் கடற்கரையில் நீர்சறுக்கில் (Surfing) ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது சுறா தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார். அவருக்கு வயது 49.

சுறா தாக்குதலுக்கு ஆளாகி தமயோ படுகாயமடைந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ஸ்கை ஜெட் மூலம் அவரை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தாமஸ்பெர்ரியை பொறுத்தவரை நார்த் ஷோர் கடற்கரையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் உயிர்காப்பாளராக பணியாற்றி வருகிறார். அக்கடற்கரையில் ஆபத்தான அலைகளில் சவாரி செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். மிகவும் மதிக்கப்படும் நீர் சறுக்கு பயிற்சியாளராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!