
பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் 1870ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் மதுரை மாவட்டம் விளாச்சேரியில் பிறந்தார்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியார் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார். கலாவதி (1898), ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார்.
இராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார். தமிழக அரசு இவரது மரபுரிமையாளர் 19 பேருக்கு ரூபாய் 15 லட்சம் பரிவுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களும் 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன. விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் பிறந்து, வாழ்ந்த இல்லத்தை, தமிழ்நாடு அரசு ரூ. 7.90 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து நினைவில்லமாக மாற்றி, 31 அக்டோபர் 2007 அன்று திறந்து வைத்தது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில், இவரது நினைவில்லத்தில் ஜூலைத் திங்கள் 6ஆம் நாளன்று பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று 154வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதில் அவரது திருவுருவச்சிலைக்கு திருப்பரங்குன்றம் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சையது இப்ராஹிம் தொகுதி துணைச்செயலாளர், மருதமுத்து தொகுதி செயலாளர், அழகுராஜா மேற்கு ஒன்றிய செயலாளர், தொகுதி தலைவர் ஆறுமுகம், தொகுதி துணைத் தலைவர் செல்வம், மதுரை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் முருகன், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் ஜெகநாதன் மற்றும் தொகுதி ஓன்றிய பகுதி கிளை உட்பட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.