மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
திருமங்கம் ஒன்றியம் 16 வது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ராமுத்தேவன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது நாகையாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களில் ஒருவர் குடிபோதையில் பிரச்சார வாகன ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தினார்.
இதனால் அக்கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடன் பணிபுரியும் மற்றொரு காவலர் கூறியும் மது போதையில் வம்பிழுத்த காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.