![](https://lemooriyanews.com/wp-content/uploads/2024/11/IMG_20240518_114301-893x1024.jpg)
![](https://lemooriyanews.com/wp-content/uploads/2024/11/IMG-20241113-WA0047-1024x683.jpg)
திருப்பரங்குன்றத்தில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான முருகன் கோவில் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி ஆண்டவர் பெண்கள் (தேவஸ்தானம்) மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவி சத்தியப்பிரியா பாலாஜி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள்,
![](https://lemooriyanews.com/wp-content/uploads/2024/11/IMG-20241113-WA0048-1024x683.jpg)
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவி சுவிதாவிமல், 97வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ரமேஷ், பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் அருந்தவம் மற்றும் பள்ளி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- போட்டோ கார்த்தி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.