
தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணியை வீழ்த்தி திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பிடித்த பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார் . மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை வீழ்த்தி திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றுள்ளார். தருமபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் அன்புமணி தோல்வியுற்ற நிலையில் இந்த தேர்தலில் அவரது மனைவி சவுமியாவும் தோல்வியை தழுவினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.