Braking News: விருதுநகர் தொகுதியில் முந்தும் மாணிக்கம் தாகூர்…

விருதுநகர் தொகுதியில் முந்தும் மாணிக்கம் தாகூர்…

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் சுமார் இரண்டு லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று 7 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கௌஷிக் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இன்று காலை தபால் வாக்குகள் எண்ணிக்கை துவங்கியதிலிருந்து மாணிக்கம் தாகூர் முன்னிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்து வந்த சுற்றுகளில் விஜய பிரபாகரன் முன்னிலை பெற்று மாறி மாறி வந்தனர்.

மாணிக்கம் தாகூர்,
பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் இரண்டு லட்சத்து 49 ஆயிரம் வாக்குகளைக் கடந்து சுமார் 7ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் விஜய பிரபாகரன் இரண்டு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகளுடனும், மூன்றாவது இடத்தில் ராதிகா சரத்குமாரும் உள்ளனர். ராதிகா சரத்குமார் சுமார் ஒரு லட்சத்து 8ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று ஒரு லட்சத்தி 49 ஆயிரம் வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!