பொத்தையடி – மயிலாடி சாலையில் ராட்சத பள்ளம். பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி. போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
பொத்தையடியிலிருந்து மயிலாடி செல்லும் சாலையில் லெட்சுமிபுரம் அருகே ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பொத்தையடியிலிருந்து மயிலாடிக்கு செல்லும் சாலை யானது மிக முக்கியமான சாலை ஆகும். இந்த சாலை யானது குலசேகரபுரம், லெட்சுமிபுரம், உசரவிளை, பெருமாள்புரம் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் பிரதான சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினமும் 5க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் ஏராளமான இருசக்கரம் முதல் கனரக வாகனங்களும் பயணிக்கின்றன. எனவே இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்தப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு வெளியூர் செல்வதற்கும், மயிலாடி வாரச் சந்தைக்கு பொருட்கள் வாங்க, விற்க செல்வதற்கும், தோவாளையில் உள்ள மலர் சந்தைக்கு மலர்களை, விற்பனை செய்யவும் மலர்களை வாங்கவும் இந்தச் சாலையில் பயணிக்கும் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு செல்வதற்கும் இந்த வழியாக வருகின்ற அரசு பேருந்தை நம்பியே இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பள்ளம் பல மாதங்களாக சீரமைக்கப் படாமல் இருந்ததால் அந்தப் பள்ளத்தில் தற்போது முட்புதர்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து நிற்கின்றது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் வரும்போது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க கோரி பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நலன் கருதி இந்தச் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.