குமரியில் தொடர் மழை.. தோவாளையில் பூ விற்பனை மந்தம்..வியாபாரிகள் வேதனை.


குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக  பூக்கள் வாங்க வியாபாரிகள் வராததால் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை மந்தமடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர்சந்தை பூக்கள் விற்பனைக்கு  தமிழக அளவில்  மிகவும் புகழ் பெற்றது. இங்கு மதுரை, ஓசூர், திண்டுக்கல் மற்றும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பல டன் பூக்கள் வரத்து இருக்கும்.
இதைப்போல் இங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி மற்றும்  கேரளா மாநிலத்திற்கும் பூக்கள் ஏற்றுமதியாகின்றது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் குமாரபுரம், தோவாளை, செண்பகராமன்புதூர் ஆரல்வாய்மொழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  நேற்று காலை முதல் விடிய விடிய இன்று வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 
இதன் காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.  தொடர் மழை காரணமாக  பொதுமக்களும் உள்ளூர் பூ வியாபாரிகளும் பூக்கள் வாங்க வராத காரணத்தால்  பூக்கள் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்னர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!