முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழாவானது, எட்டாம் நாளான நேற்று மாலை சுவாமிக்கு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டதோடு, வைரக்கல் பதித்த கிரீடத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று காலையில் உற்சவர் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்பு சுவாமி தெய்வானையுடன் தங்க அங்கி அலங்காரத்தில், பல்லக்கில் நவரத்தினங்களால் ஆன செங்கோல் பிடித்தபடி சுவாமி எழுந்தருளி, திருவாச்சி மண்டபத்தை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தேவையான மூன்றரை அடி உயர தாமிரம் கொப்பறையில் 300 கிலோ நெய்., 150 மீட்டர் காடா துணியுடன் கொண்ட திரி, 5 கிலோ எடையில் கற்பூரம் வைத்து மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் மேல் தளத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கு திருவண்ணாமலையிலிருந்து தீபம் ஏற்றும் குழுவினர் கொட்டும் மழையிலும் தீபம் ஏற்றுவதற்கான பணியில் ஈடுபட்டனர். மாலை 5 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கம்பத்தடி மண்டபத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, மூலஸ்தானத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மாலை 6 மணிக்கு பாலதீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபம் ஏற்றும் பொழுது சங்கு மற்றும் வானவேடிக்கை பட்டாசுகள் முழங்க திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்றப்பட்டது.
மாலை நான்கு மணி முதல் 7 மணி வரையில் கோவிலின் பிரதான வாயில் சாத்தப்பட்டு கோவிலின் வலது புறம் உள்ள திருக்குளம் வழியில் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டதை பக்தர்கள் கோவில் முன்பு பெருந்திரளாக நின்று வழிபட்டனர். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் மலைப்பாதை மற்றும் படிப்பதை உள்ளிட்ட பகுதிகளில் மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் தங்கதுரை மற்றும் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பனை பொருத்தப்பட உள்ளது. இதில் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கிராமத்தினர் விவசாயம் செழிக்க வேண்டி எரிந்த சொக்கப்பனை சாம்பலை எடுத்து சுற்றுப்புற கிராம விவசாயிகள் தங்கள் வயல்களில் இடுவார்கர். இதனையடுத்து இரவு 8 மணிக்கு சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் திருவாட்சி மணடபத்தை சுற்றிவந்து அருள்பாலிக்க உள்ளார். விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தீர்த்த உற்சவம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.