திருச்செந்தூர் கோவில் கடற்கரை மணலுக்குள் புதைந்து பசுமை சித்தர் சிவ பூஜை செய்தார்
சேலம் மாவட்டம் தீர்த்தமலையைச் சேர்ந்தவர் வைத்தியலிங்க சுவாமிகள் என்ற பசுமை சித்தர். இவர் ஓம் தேசிய பசுமை இயக்கம் நிறுவனர் ஆவர். இவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மரம், செடி, கொடிகளை வளர்க்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் வலியுறுத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு வருகை தந்து விரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா 5-ம் நாளான நேற்று கடற்கரையில் மணலால் ஐந்து லிங்கங்கள் உருவாக்கினார். பின்னர் அவர், மணல் லிங்கங்கள் முன்னாள் சுமார் 5 அடி ஆழம் குழி தோண்டி அதில் புதைந்து கழுத்தளவு மணலால் மூடி அரை மணி நேரம் சிவ பூஜை மேற்கொண்டார். பூஜை முடித்த பின்னர் அவர் கூறியதாவது:-
பஞ்சபூத சக்திகளால் உலக மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் மக்கள் அமைதியாகவும், சுபிட்சமாகவும் வாழ வேண்டும். அதேபோல் கொரோனா முற்றிலும் அழிந்து அடுத்த ஆண்டு நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பூஜையை செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.