மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர் 3-வது பேருந்து நிறுத்தத்தில் உள்ள சாலை கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளன.மதுரையிலிருந்து தென்மாவட்டங்கள் செல்லக் கூடிய பிரதான சாலையாக விளங்கக் கூடிய இந்த சாலை திருநகர் பகுதியின் முக்கிய சாலையாகவும் விளங்குகின்றன.பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் இந்த சாலை வழியாக மதுரை மாநகரத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கைளை பெரிதும் சிரமப்பட்டுவாகன ஓட்டிகள் ஓட்டுகின்றனர்.
மதுரையில் சாலைகள் பலி மேடைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன மதுரை மட்டுமல்ல தமிழகம் எங்கும் மழைக் காலத்தில் ஒருவர் வெளியே போய் வீடு திரும்புவதே சாகசச் செயலாகத்தான் இருக்கிறது. குண்டும் குழியுமாக எங்கும் அச்சுறுத்தும் சாலைகள் இன்னும் எத்தனை உயிர்களை பலிவாங்கி போகின்றன என்ன செய்யப்போகிறது மதுரை மாநகராட்சி..?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.