கண்ணை இமைகாப்பது போல் – நம்மைக் காக்கும் காவலர் தினம் இன்று! பெருமிதம் கொள்வோம்

காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் இனிய காவலர் தின வாழ்த்துக்கள்

காவல் துறையில் பணியில் இறந்த ஆன்மாக்களை நினைவு கூறும் நாள் தான் அக்டோபர் 21.

முதன் முதலில் 1866 நியூ யார்க்கில் துவக்க பட்டது நம் நாட்டில் 1959 ஆம் ஆண்டு லடாக்கில் இந்திய திபெத் பார்டரில் சீனாவால் சுட்டு கொல்லப்பட்ட பத்து காவல் வீரர்களின் நினைவாக இந்த நாள் துவக்க பட்டது .

காவல் துறை அன்பர்களே, காவல் துறை நண்பர்களே, காவல் துறை நினைவு இன்று நாடே உங்களை இணைவுக்கூறும் நாள் .

உங்களில் இறந்த ஆன்மாக்களுக்கு இன்று நினைவு நாள் போரில் விபத்தில் இறந்த காவல் ஆன்மாக்களுக்கு ஒரு சல்யுட் .

உங்கள் பணியை யார் நினைக்கிறார்கள் ஓய்வு இல்லா பணி எந்நேரமும் மிடுக்குடன் இருக்கும் கம்பிர காவலர்களே..

காவல் துறையில் சேர எத்தனை ஆர்வம் சேர்ந்த பின் தான் புரியும் உங்கள் கஷ்டம் எந்நேரமும் உங்கள் வேலை நினைவில் நாட்கள் நகர உங்களையே மறந்து போக

உங்கள் குடும்பத்தை கூட மறக்க நீங்கள் பணிபுரியும் இடத்தை என்றும் மறக்காமல் நடை போட உங்களை மறப்பவர்கள் நிறைய

யாரோ ஒரு சில காவலர்கள் செய்யும் தவறால் வெறுத்து போகும் நாம் அனைத்து காவல் உள்ளத்தை வெறுக்கிறோம் .

கண் இமைகள் சொருகினாலும் தூக்கத்தை உதறி தள்ளி இரவு முழுவதும் நமக்காக காவல் காத்து வரும் தியாக உள்ளங்களுக்கு எங்கள் சல்யுட்.

மத்திய சேமக் காவல் படை அல்லது சி.ஆர்.பி.எஃப். என்பது மத்திய காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாகும். இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. 1959 அக்டோபர் 21ல் இப்படையைச் சேர்ந்த எஸ்.பி. கரம் சிங் மற்றும் அவரது 10 படைவீரர்களும் சீன இராணுவத்தால் லடாக் பகுதியில் சுடப்பட்டனர். அதன் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று காவலர் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும், உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை, வாழ்த்திப் பாராட்டுவதில் லெமூரியா நியூஸ் குழுமம் சார்பாக பெருமிதம் கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!