மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அருகே உள்ள பாரத் பெட்ரோலியம் பல்கில் upil எனும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரகு எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
பாரத் பெட்ரோலியம் வர்த்தக மேலாளர் சரவணன் தலைமை வகிக்க பிராந்திய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி புதிய upil செயலியை அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் பணம் வைத்திருப்பவர் எங்கிருந்தாலும் பாரத் பெட்ரோலியம் செயலிக்கு பணம் அனுப்பி அதன் கியூ ஆர் கோடு எனப்படும் பரிவர்த்தனை கோடை பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கில் (விற்பனை நிலையத்தில்) காட்டி பெட்ரோல் அல்லது டீசல் எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம்.
இதனால் பணம் செலுத்தி எங்கிருந்தாலும் பணமற்ற பரிவர்த்தனை செய்யவும் கியூ ஆர் கோடு என்னும் அடையாள குறியீட்டுடன் தானியங்கி எரிபொருள் நிரப்பிக் கொள்வது மூலம் எரிபொருள் நிரப்ப தேவையில்லாமல் காத்திருப்பது போன்ற சிரமம் ஏற்படுவதை தவிர்க்க இயலும் என்று பாரத் பெட்ரோலியம்பிராந்திய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார் .
இதன் மூலம் பணமற்ற பரிவர்த்தனையும் விரைவான எரிபொருள் நிரப்பும் சேவையும் இன்று முதல் தமிழகத்தில் ஆறு மாவட்டங்களிலும் மதுரை மாவட்டத்தில் 18 பாரத் பெட்ரோலியம் பங்குகளிலும் புதிய செயலி அமலுக்கு வந்துள்ளது .
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி விரைவான சேவை பெற்றுக்கொள்ளலாம் என பிராந்திய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.