திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நிலையூர் ஊராட்சியில் கைத்தறி நகர் பகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தெருக்கள் முழுவதுமாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் வீடுகள் தோறும் கூடிய வினியோகத்துக்காக தனித்தனியாக புதிய குழாய்கள் பொறுத்தும் பணியும் நடந்து வருகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் தெருக்களில் குழாய்கள் உபகரனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை கடந்த சில நாட்களாக திருடு போயின என்பது தெரியவந்துள்ளது.
மேலும் வீடுகளுக்கு முன்பாக பொறுத்தப்பட்ட குழாய்களையும் அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை முத்துபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி (வயது 37) என்பவர் தெருக் குழாய்களை அறுத்து கொண்டிருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தனர்.
அதனையடுத்து ஊராட்சி துணைத்தலைவர் பானுமதி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு குழாய் திருடிய நபரை கையும் களவுமாக பிடித்து ஆஸ்டின்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.