1500 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி காலமானார்

மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என அழைக்கப்படுகிறார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

மதுரை ஆதினத்திற்கு இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் இருந்து வந்தார்.

மதுரை ஆதீனத்தில் ஏப்ரல் 27, 2012 அன்று நித்தியானந்தாவை 293வது ஆதீனமாக அறிவித்து முடிசூட்டினார்.

அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

இந்திலையில் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Leave a Reply

error: Content is protected !!