நிகழ்வுகளின் நிஜங்கள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகல ஆரம்பம்

விழாவில் முக்கிய நிகழ்வுகளாக வரும் 14ஆம் தேதி கோவர்த்தனம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் விழாவும் 15ம் தேதி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் 16ம் தேதி கிரிவலப் பாதையில் சட்டத்தேர் வலம் வருதல் பாவாடை தரிசனம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது

கந்த சஷ்டி திருவிழா
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களுல் கந்தசஷ்டி திருவிழா முக்கிய விழாவாகும்.

இந்த திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வளர்பிறை திரிதியை நட்சத்திரத்தில் துவங்கி 7 நாட்கள் வெகு விமர்ச்சியாக கொண்டாடுப்படுவது வழக்கம்.

ஆகவே இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இன்று செவ்வாய் கிழமை 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி வருகின்ற 16- ந் தேதி வரை நடைபெறுகிறது

10-ந் தேதிகாப்பு கட்டுதல்
திருவிழாவின் முதல் நாளான 10-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7 மணியளவில்உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கும், பிறகு சண்முகர்சன்னதியில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் சண்முகருக்குமாக காப்பு கட்டுதலும் நடைபெற்றது.

இதனையடுத்து 9. மணியளவில் முருகப்பெருமானின் பிரதிநிதியாக சூரம் சம்ஹார விழாவில் பங்கேற்கும் கோவில் சிவாச்சிரியருக்கு காப்பு கட்டப்படுகிறது.

பின்னர் கோவில்
கம்பத்தடி மண்டபத்தில் பக்தர்களுக்கு கைகளில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும் .

இதனை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது வேண்டுதலின் படி ஒரு வேளை மட்டும் பால், மிளகு, துளசி ஆகியவற்றை சாப்பிட்டு கோவிலிலே 6 நாட்கள் தங்கி கடும் விரதம் இருக்கிறார்கள்

மேலும் அவர்கள் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையிலுமாக கோவிலுக்கு கிழக்கு பகுதியில் உள்ள சரவண பொய்கையில் நீராடி கிரிவலம் வந்து தரிசனம் செய்வார்கள்.

14ம் தேதி கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் விழா
15-ந தேதி சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விழாவினையொட்டி 6 நாளும் விசாக கொறாடு மண்டபத்தில் ஒரு வேளை யாகசாலை பூஜையும், சண்முகர் மண்டபத்தில் காலை 11 மணியளவிலும், மாலை 5 மணியளவிலுமாக 2 வேளையில் வள்ளி தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 14-ந் தேதி காலை 8.30 மணி அளவில் யாகசாலை பூஜையும் மாலை: 6.30 – 7.30 மணிக்குள் ஆலயப் பணியாளர்கள் திருக்கண் நடைபெறும் பின்னர் வேல் வாங்குதல் நிகழ்ச்சி அருள்மிகு சத்தியகிரீஸ்வரருக்கும், அருள்மிகு கோவர்த்தனாம்பிகை அம்மனுக்கும் தீபாராதனை முடிந்து, நம்பியார்பட்டருக்குப் பரிவட்டம் கட்டி, அம்மனிடம் உள்ள வேலுடன் சகல விருதுகளும் பெற்ற நந்தியை வலம் வந்துகம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமியின் திருக்கரத்தில் சாற்றி, தீபாராதனை, பூச்சப்பர அலங்காரத்தில் சுவாமி திருவாட்சி மண்டபத்திற்கு எழுந்தருளி ஆறுமுறை வலம் வந்து முடிவில் சேர்த்தி சேர்ந்து சிவகங்கைக கட்டளைத் தீபாராதனை நடைபெறும்.

15.11.2026 ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி 29 (6ஆம் திருநாள்)காலை: 6.30 மணிக்குள் யாகசாலை பூஜை முடிந்து, உச்சிக்கால பூஜை முடிந்த பின்னர்அருள்மிகு சுப்பிரமணியரும், அருள்மிகு வீரபாகுத்தேவரும் திருக்கோயிலுக்குள் அமைந்துள்ள மதுரை வெள்ளியம்பலம் ஒடுக்கம் வகையறா மண்டபத்தில் எழுந்தருளல். மாலை 4.00 மணிக்கு தீபாராதனை முடிந்து, திருக்கோயிலுக்குள் அமைந்துள்ள கூத்தியார்குண்டு சோமசுந்தரம்பிள்ளை வகையறா மண்டபத்திற்கு எழுந்தருளி கட்டளை தீப-தூப ஆராதனைகள் நடைபெற்று முடிந்து, வீதிக்கு எழுந்தருளல், வீதி புறப்பாட்டில் வீதி உலா வரும்போது அசுரர்களை வதம் செய்து முடிவில் சன்னதி தெரு அருள்மிகு சொக்கநாதர் கோயில் முன்பு மாலை 6.00 -6.30 மணிக்கு சூரசம்ஹாரலீலை நடைபெற்ற பின்தீபாராதனை, சுவாமி சேர்த்தி சேர்ந்து சிவகங்கை கட்டளை தீபாராதனை அருள்மிகுசுப்பிரமணியசுவாமிக்கும், அருள்மிகு தெய்வானை அம்மனுக்கும் அபிஷேக, அலங்காரங்கள் முடிந்து மாலை மாற்றி, தீபாராதனைக்குப்பின் மீண்டும் சுவாமி பூச்சப்பரத்தில் வீதிக்கு எழுந்தருளி உலா வருதல்.

16.11.2026 திங்கட்கிழமை ஐப்பசி 30 (7ஆம் திருநாள்) காலை 8.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, இரதவீதி, கிரிவீதிகளில் வலம் வந்து திருக்கோயில் திருவாட்சி மண்டபத்தில் உள்ள திருக்கண்ணில் தீபாராதனை முடிந்துசிவகங்கை ராஜா மண்டபம் (திருவாட்சி) சேர்தல், மாலை 4.00 மணிக்குள் மூலவருக்குத் தைலப் புண்ணியாகவாசனமாகி, மதுரைவெள்ளியம்பலம் ஒடுக்கம் வகையறாக் கட்டளை மண்டபத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பாவாடை சாதம், நிவேதனம் செய்யப்பட்டு, மாலை 4.30 மணியளவில் தீபாராதனை, இரவு 8.00 மணிக்கு சுப்பிரமணியசுவாமிபுறப்பாடாகி வீதி உலா பின் சேத்தி சேர்க்கை திருவிழா நாட்களில் தினசரி காலை, மாலைவேளைகளில் சண்முகார்ச்ச

னை நடைபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Exit mobile version