நவம்பர் 27 மாவீரர் நாளை பண்பாட்டு விழாவாக மாற்றறுவோம் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அனைவரையும் குடும்பத்தோடு வாருங்கள்.
மாவீரர் நாளில் நாம் அனைவரும் தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் சென்று நமது மாவீரர்களுக்கு குடும்பத்தோடு நினைவேந்தல் நிகழ்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். பெருமதிப்பு மிக்க ஐயா பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் நம் தமிழ்தேசிய செயல்பாட்டாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்து நிகழ்வில் பங்கெடுக்கும் சூழலை உருவாக்க வேண்டுகிறோம். இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழ்த்தேசிய அமைப்புகளும் மாவீரர் நாளில் முற்றம் செல்வதாகவும் தீர்மானிக்கப் பட்டு, அனைத்து அமைப்புகளிடம் பேசி வருகிறோம். இதை முன்னின்று நடத்தும் வேலையை நம் தமிழ்தேசிய அமைப்புகள் இணைந்து செய்ய வேண்டுகிறோம்.. மாவீரர் நாளில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழர்கள் கூடுவது என்பது இனி ஒரு பண்பாட்டு சடங்காக மாற வேண்டும் என்ற முனைப்போடு அணிதிரள்வோம் உறவுகளை… அனைவரும் தவறாது நிகழ்வில் குடும்பத்துடன் தமிழ்தேசியர்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டுகிறோம்…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.