கோவையில் நடந்த வித்தியாசமான திருமணம் – குவியும் பாராட்டுகள்.

கோவை மாவட்டம் சோமனூர் கொங்கு கலையரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த்- சாதனா திருமண நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து, அவர் வாழ்த்துக்களைப் பெற்று, அறுசுவை உணவளித்து, தங்கள் சொந்தமாகக் கருதி அவர்களை பத்திரமாக அவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்த திருமண வீட்டார் பாராட்டுக்குரியவர்கள்.

குழந்தைகள் அனைவரும் மணமேடையில் மணமக்களை ஒருமித்த குரலில் வாழ்த்தியது தங்கள் இல்லத்திருமணம் போல துள்ளிக்குதித்து ஓடியது கண்கொள்ளாக் காட்சி.

இருபதுக்கும் மேற்பட்ட கல்யாண அழைப்புகளை கையில் வைத்துக்கொண்டு,அவசரம் அவசரமாக மணமக்களை வாழ்த்தக்கூட நேரமில்லாமல்,பந்தியில் பெயர்க்கு அமர்ந்துவிட்டு,உணவை வீணடிப்போருக்கு மத்தியில் இக்குழந்தைகள் மனமார மணமக்களை வாழ்த்தியது அனைவராலும் பாராட்டுக்குரியது.

இதை அனைவரும் பின்பற்றலாமே ஆதரவற்றுவர்களுக்கு உறவாகவும் உதவியதாகவும் இருக்குமே! என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!