ரயில் பயணிகள் கவனத்திற்கு. ரயில் நீர் தண்ணீர் பாட்டில் விலை 15 மட்டுமே.. IRCTC வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்.!!!!!
இந்தியாவில் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு முன்கூட்டியே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு தேவையான உணவை ரயில்வே நிர்வாகமே கொடுத்து வருகிறது. பயணிகள் அதற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இருப்பினும் தண்ணீர் பாட்டில்களை பயணிகள் அவ்வப்போது ரயில் நிலையங்களில் வாங்கும் நிலை உருவாகிறது. இதனை கருத்தில் கொண்ட ரயில்வேத்துறை ரயில் நீர் என்னும் பெயரில் ஆன தண்ணீர் பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.அதாவது ஐ ஆர் சி டி சி மூலமாக தினமும் சுமார் 20 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.15 என குறிப்பிடப்பட்டுள்ளது.

விற்பனையாளர்கள் இதனை ரூ.20 முதல் 25 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐஆர்சிடிசி கவனத்திற்கு இது குறித்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது தண்ணீர் பாட்டில் அதிக விலைக்கு விற்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐ ஆர் சி டி சி அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் ரயில் நீர் தண்ணீர் பாட்டில் விலை ரூ.15 மட்டுமே அதற்கு மேல் செலுத்த வேண்டாம். அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே தண்ணீர் பாட்டிலை வாங்க வேண்டும் என கூறியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.