
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் உள்ள அரசியல் விரோதம் அனைவரும் அறிந்ததே. இருவரும் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை தோற்றுப் போனதற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம். அது முதலாகவே கடந்த இரு ஆண்டுகளாக அண்ணாமலையும் செந்தில் பாலாஜியும் அரசியல் களத்தில் தொடர்ந்து வெளிப்படையாகவே மோதிக் கொண்டுள்ளனர்.
அண்ணாமலை அணிந்துள்ள வாட்ச் விவகாரத்தை பூதாகரமாக்கினார் செந்தில் பாலாஜி.பதிலுக்கு டாஸ்மாக்கில் செந்தில் பாலாஜியின் ஊழல்களை அம்பலப்படுத்தினார் அண்ணாமலை. இப்படி இருவருக்கும் இடையிலான மோதல் முற்றி வந்த நிலையில் தமிழ் நாட்டில் சமீப நாட்களாக கள்ளச் சாராய சாவுகளும் டாஸ்மாக் பாரில் மது அருந்துபவர்கள் மர்மமாக திடீர் திடீர் என மரணம் அடைவதும் அதிகரித்து வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை என பல்வேறு மாவட்டங்களிலும் சாராய சாவுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக அண்ணாமலையும் அவரது கட்சியினரும் செந்தில் பாலாஜியை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை ஊழல் வழக்கில் கைது செய்துள்ளது.
இவையெல்லாம் தற்செயலாக நடப்பது போல தெரியவில்லை. கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக நடந்து வரும் சம்பவங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதித் திட்டம் இருப்பது புலனாகிறது.
முக்கியமாக கடந்த 13.05.2023 அன்று கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாள் இரவில் மரக்காணம், செங்கல்பட்டு ஆகிய இரு ஊர்களில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியானது பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஏனென்றால் கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிகழ்வானது அங்கு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய அண்ணாமலையின் தோல்வியாக பார்க்கப்பட்டு தேர்தல் முடிவு வெளியான மே 13 காலை முதலே சமூக ஊடகங்களில் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் கேலியும் கிண்டலும் வைரலாக பரவிக் கொண்டிருந்தன. அண்ணாமலையாலும் பாஜக ஆட்களாலும் இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற முடியவில்லை. கிட்டத்தட்ட அண்ணாமலையின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியான சூழல் ஏற்பட்டது.
இச் சூழ்நிலையில் தான் 13.05.2023 அன்று இரவில் மரக்காணம், செங்கல்பட்டு கள்ளச்சாராய சாவுகள் பற்றிய செய்தி வெளிவந்து தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வி, அண்ணாமலை பற்றிய விமர்சனங்கள் அனைத்தும் பின்னால் தள்ளப்பட்டு கள்ளச்சாராய சாவுகள் பற்றிய விவாதம் பெரிதாகி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு எதிராக விவாதம் திரும்பியது. கடந்த ஒரு மாதமாக அண்ணாமலையும் பாஜக வினரும் இதை வைத்து தான் அரசியல் செய்து வருகின்றனர். இவை அனைத்துமே திட்டமிட்ட சதியாக தோன்றுகிறது.
காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராய சாவுகள் நடக்க வாய்ப்பே இல்லை. தமிழ்நாடு காவல்துறையானது RSS ன் துணை அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. டிஜிபி சைலேந்திர பாபு சைலன்ட் சங்கியாக செயல்படுகிறார். மோடி அரசின் ஊழல்களை நாங்கள் அம்பலப்படுத்துவதால் ஆத்திரமடைந்துள்ள அண்ணாமலை எங்கள் மீது ரௌடிகளை ஏவி விடுகிறார். சைலன்ட் சங்கியாக செயல்படும் சைலேந்திரபாபு எங்கள் மீது தொடர்ந்து போலீஸ் அடக்குமுறையை ஏவி விடுகிறார்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணத்தில் RSS பள்ளி நிர்வாகத்துக்கு சாதகமாக நடந்து கொண்டது, தி கேரளா ஸ்டோரி பட வெளியீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை மூடி மறைப்பது , மதக்கலவரங்களை தூண்டி தமிழ்நாட்டை சீர்குலைக்க சதி செய்யும் அண்ணாமலை மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அண்ணாமலைக்கு மறைமுக கூட்டாளியாக செயல்படுவது என டிஜிபி சைலேந்திரபாபு தொடர்ச்சியாக RSS- பாஜக வின் திட்டங்களுக்கு உடந்தையாகவே செயல்பட்டு வருகிறார்.
சைலேந்திரபாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் வீட்டின் முன்பு நாங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம். முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை RSS கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது என்பதே உண்மை.
RSS-BJP கட்டுப்பாட்டில் காவல்துறை. வீடியோ ஆதாரங்கள்:
https://m.facebook.com/story.php?story_fbid=1605631499950647&id=100015114364035&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=1628187014361762&id=100015114364035&mibextid=Nif5oz
https://m.facebook.com/story.php?story_fbid=1559720641208400&id=100015114364035&mibextid=Nif5oz
எனவே தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் சாராய சாவுகள் அனைத்துமே திட்டமிட்ட சதிச்செயலாகவே தோன்றுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக சங்கி கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பது நாடறிந்த உண்மை.அதிலும் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக கடும் சவால்களை சந்தித்து வரும் பாசிச பாஜக அரசியல் செய்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும்.
சாராய சாவுகளுக்கு பின்னால் அண்ணாமலை-RSS-பாஜக சதி உள்ளதா என தீவிரமாக விசாரிக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் கொடுத்து சங்கிகள் அரசியல் செய்ய களம் அமைத்துக் கொடுத்த மு.க.ஸ்டாலின் அரசு பாஜக-RSS கும்பலின் சதி திட்டங்களுக்கு எதிராக ஒன்றும் செய்யப் போவதில்லை. தங்களின் சுயநலனுக்காக திமுக தலைமை பாசிச கும்பலுக்கு அடிபணிந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக பாஜக வை எதிர்ப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாராய சாவுகள் தானே என இம் மரணங்களை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. இதை நாம் கேள்வி கேட்கவில்லையென்றால் இதை விட கொடூரமான சதி திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக இந்த சதிகாரர்கள் தீட்டிக் கொண்டே இருப்பார்கள். தமிழ்நாட்டின் மீது அக்கறையும் அரசியல் விழிப்புணர்வும் கொண்டவர்கள் தான் சங்கி கும்பலின் சதிகளை தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.நாங்கள் தொடர்ந்து இதை செய்வோம் என சமூக வலைதளங்களில் நந்தினி ஆனந்தன் பதிவிட்டுள்ளவை தற்போது வைரலாக பரவ வருகிறது.
- நந்தினி ஆனந்தன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.